ஆத்தூர் அருகே பயங்கரம்- வாலிபர் எரித்து கொலை

ஆத்தூர் அருகே பயங்கரம்- வாலிபர் எரித்து கொலை

ஆத்தூர் அருகே 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் ஆத்தூர் நகர போலீஸ்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே ஆத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் எரிக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு நிர்வான நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  என்ற தெரியவில்லை.

இதனால் அந்த பகுதியில் மாயமானவர்களின் பட்டியலை தயார் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  அவரை எரித்து கொன்று உடலை அங்கு வீசி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக எரித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com