டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை கொள்ளை
டாஸ்மாக் கடை கொள்ளை
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள கிச்சடிபாளையத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக அழகுவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது ஓடு பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 19 மதுபாட்டில்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இது குறித்து விற்பனையாளர் அழகுவேல் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com