ஆத்தூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுக ஆர்ப்பாட்டம்
மதிமுக ஆர்ப்பாட்டம்
Published on

ஆத்தூர்:

சேலம் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால்ராசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ், கோவி அசோகன், மற்றும் பொன்.சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மகளிரணி செல்ல பாப்பு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் மகேந்திரன், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ராமு, தலைவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வி, ராமராஜ், தங்க நெடுமாறன், வைகோ ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com