திருப்பூரில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது

திருப்பூரில் வாடகை பாக்கி தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அன்னம்மாள்(28). இவர்கள் அந்த பகுதியில் முத்துராஜா என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

வாடகை பாக்கி இருப்பதால் முத்துராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜா, அவருடைய நண்பர்களான மதுரை பேரையூரை சேர்ந்த பாண்டியராஜன்(40), ராஜீவ்(35), பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை இரும்பு கம்பியால் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மணிகண்டன் மனைவி அன்னம்மாள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், ராஜீவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com