கன்னியாகுமரியில் காபியில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

கன்னியாகுமரியில் லாட்ஜில் காபியில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக அவரது தாயார் மற்றும் தாயாரின் கள்ளக்காதலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் கன்னியாகுமரி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த சஜூ (வயது 50) என்பவருக்கும், எனது தாயாருக்கும் கள்ளக்காதல் உண்டு. இருவரும் தற்போது சேர்ந்து வாழ்கிறார்கள். நான் திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். சஜூவும் எனது தாயாரும் மீன்வியாபாரத்துக்காக கன்னியாகுமரிக்கு வருவது உண்டு.

சம்பவத்தன்று எனது தாயார் என்னையும் எனது சகோதரியையும் கன்னியாகுமரிக்கு வருமாறு அழைத்தார். அதன்படி நானும் எனது சகோதரி மற்றும் உறவினரும் குழந்தைகளுடன் கன்னியாகுமரிக்கு வந்தோம். ஒரு லாட்ஜில் எங்களை அழைத்து சென்றனர். அந்த லாட்ஜூக்கு சென்றவுடன் குழந்தைகளை எனது தாயார் வெளியே அழைத்து சென்றார்.

அப்போது சஜூ எனக்கு குடிப்பதற்கு காபி கொடுத்தார். அந்த காபியில் மயக்க மருந்து கலந்திருந்தார். சிறிது நேரத்தில் நான் மயங்கினேன். மயக்க நிலையில் இருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். திடீரென்று எனக்கு உணர்வு வந்தது. நான் கூச்சலிட்டதும் வெளியே ஓடிவிட்டார். நான் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது என்னை சஜூவும் எனது தாயாரும் புகார் கொடுத்தால் கொன்று விடுவதாக மிரட்டினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போல்சார் சஜூ மற்றும் இளம்பெண்ணின் தாயார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com