வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.
வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே வேல்வார்கோட்டை புதுகளரம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வடமதுரை ரெயில் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இங்கு செங்குளத்துப் பட்டியை சேர்ந்த மகாலிங்கம், போஜனம்பட்டியை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் உணவு சாப்பிட வந்துள்ளனர். விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் சாப்பிட்டதற்கான பில் தொகையை செந்தில்குமார் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் மற்றும் முருகபெருமாள் செந்தில்குமாரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com