கோபா டெல் ரே கால்பந்து: காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன.
தோல்வி சோகத்தில் பார்சிலோனாவின் மெஸ்சி
தோல்வி சோகத்தில் பார்சிலோனாவின் மெஸ்சி
Published on

இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - அத்லெடிக் பில்போ அணிகள் மோதின. 90-வது நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் இன்ஜூரிக்கான நேரத்தில் (93-வது நிமிடம்) அத்லெடிக் பில்போ அணிக்கு ஓன் கோல் மூலம் கோல் கிடைத்தது. இதனால் 1-0 என பார்சிலோனாவை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - ரிய் சோசிடாட் அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்கு அச்சுறுத்தும் வகையில் விளையாடிய ரியல் சோசிடாட் அணி 22, 54 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.

இதனால் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 59-வது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் 69-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் 69-வது கோல் அடித்து 4-1 என முன்னிலைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com