விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்

அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று ரவுடி வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி வரிச்சூர் செல்வம்
ரவுடி வரிச்சூர் செல்வம்
Published on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த நிலையில் நேற்று பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் முக்கிய நபர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடி ஒருவர் முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com