அத்திவரதர் பாதுகாப்புக்கு சென்ற 620 போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை

அத்திவரதர் பாதுகாப்புக்கு சென்ற 620 போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை என்று திருவள்ளூர் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை
விடுமுறை
Published on

திருவள்ளூர்:

அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் தமிழக முழுவதிலும் இருந்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் 620 போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். அத்திவரதர் தரிசனம் நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து அனைவரும் தங்களது பணியிடங்களுக்கு திரும்பினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பணிக்கு சென்று திரும்பிய 620 போலீசாருக்கு இன்றும், நாளையும் ஊதியத்துடன் கூடிய 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com