அமெரிக்கா - கெண்டகி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
அமெரிக்கா - கெண்டகி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது குராகர் சூப்பர் மார்க்கெட்.

நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்தான். கையில் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான்.

இந்த திடீர் தாக்குதலில் அங்கிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com