ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
வெடிகுண்டு தாக்குதல் நடந்த ப்குதி
வெடிகுண்டு தாக்குதல் நடந்த ப்குதி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் தற்கொலைப் படையினரின்  வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு ஒன்றை கட்டிக் கொண்டு பைக்கில் வந்த பயங்கரவாதி பேருந்து ஒன்றின் மீது மோதி அதனை இன்று காலை வெடிக்க செய்தான். தொடர்ந்து இரு வேறு இடங்களிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. 

இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அந்நாட்டு உள்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com