2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் உட்பட 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் உட்பட 5 பேர் பலி
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்திலிருந்து இன்று யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பதாயுலி கிராமத்திற்கு அருகில் சென்றபோது, ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இதில் இரண்டு பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்தன.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெண் உட்பட 2 பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர் என மல்பூரா காவல் நிலைய அதிகாரி ரமேஷ் பரத்வாஜ் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து டிரைவரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com