நைஜீரியா: போகோஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாகனங்களை தீவைத்து எரித்த பயங்கரவாதிகள்
வாகனங்களை தீவைத்து எரித்த பயங்கரவாதிகள்
Published on

கனோ:

நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர் அமைப்பு பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றன. 

இந்த பயங்கரவாத அமைப்பு கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு தீவைத்தும், உணவு பொருட்களை கொள்ளையடித்தும் அட்டுழியத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அரசு படையினருக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் போர்னோ மாகாணத்தில் உள்ள கொண்டுஹா என்ற பகுதியில் நுழைந்த போகாஹராம் பயங்கரவாதிகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பரிதாபமாக உயிரிழந்தனர். 

பெண்கள், குழந்தைகள் உள்பட சிலரை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.  மேலும், 18-க்கும் அதிகமான வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தும் பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்துவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களை மீட்கும் முயற்சியில் திவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com