அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தும் ராணுவத்தினர்
தாக்குதல் நடத்தும் ராணுவத்தினர்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்தில் உள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com