ஜம்மு காஷ்மீர் எல்லையை ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் அதிரடிப் படையைச் சேர்ந்த 2 கமாண்டோக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்காக எல்லையில் போர்நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சுந்தர்பானி செக்டாரில் பாகிஸ்தான் அதிரடிப் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படைப்பிரிவை சேர்ந்த 2 கமாண்டோக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com