பாகிஸ்தானில் கனமழை - 17 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தானில் கனமழை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com