மாலி நாட்டில் கட்டிடம் இடிந்து விபத்து - 15 பேர் பலி

மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் நேற்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகினர்.
இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடம்
Published on

பமாகோ:

மாலி நாட்டின் பமாகோ நகரில் உள்ளது பன்கோனி மாவட்டம். இப்பகுதியில் கட்டுமான நிலையில் இருந்த ஒரு மூன்றடுக்கு மாடி கட்டிடம் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலியாகினர். விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என குறிப்பிட்டார்கள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com