பெருநாட்டில் ஓட்டல் மீது மண் சரிந்து 15 பேர் பலி

பெருநாட்டில் ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் திருமண கோஷ்டியினர் 15 பேர் பலியானார்கள். #Peru #Mudslide #Hotel
பெருநாட்டில் ஓட்டல் மீது மண் சரிந்து 15 பேர் பலி
Published on

லீமா:

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.

இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com