ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதாஷன் மாகாணத்துக்கு உட்பட்ட வார்டஷ் மாவட்டத்தில் அரசுப்படைகள் ஆளில்லா விமனங்கள் மூலம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக பெண்கள் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

அரசு படைகள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஒரு தலிபான் தளபதி மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com