ஆப்பிரிக்க நாட்டில் பயங்கர நிலச்சரிவு - 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்
நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவோரி கோஸ்ட். நாட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. என்ன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து, மின்சாரம் கவிதை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com