பவானிபூர் இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குப்பதிவு: பொதுத்தேர்தலைவிட குறைவு

மம்தா பானர்ஜி போட்டியிடுட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
வாக்களிக்க நின்றவர்கள்
வாக்களிக்க நின்றவர்கள்
Published on

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.

அதற்கு ஏற்ப பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிபூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பவானிபூர் தொகுதியில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சட்டசபை தேர்தலின்போது 61.79 சதவீத வாக்குகள் பதிவாகின. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சோபன்டெப் சாட்டோபாத்யாய் மட்டுமே 57.71 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது அவர் வாங்கியதை விட குறைவான சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரண்டு தொகுதிகளிலும் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com