ஆஸ்டின்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்

ஆஸ்டின்பட்டி அருகே மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்டின்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்
Published on

மதுரை:

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஆஸ்டின்பட்டி அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த 17 வயது பெண் பசுமலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் தந்தை ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில், முகாமில் வசிக்கும் வசந்தராஜன் என்பவரின் மகன் அருண் (வயது 19) என்பவர் மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவரை கடததிச் சென்றவரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com