மனைவிக்கு கொலை மிரட்டல் - உதவி பேராசிரியர் கைது

கோவையில் 2-வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஒத்தக்கால்மண்டபம் குட்டி கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 31). உதவி பேராசிரியர். இவரது மனைவி ஜீவா (27). இவர் ஜீவா கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவக்குமாருக்கும், எனக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது. இதனால் அவர் தினமும் என்னிடம் தகராறு செய்து கொடுமைப்படுத்தினார்.

இதனால் மனவேதனை அடைந்த நான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டு சித்தாபுதூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த நிலையில் எனது கணவர், வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக எனது வாட்ஸ்-அப்புக்கு புகைப்படம் வந்தது.

நான் எனது கணவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக தட்டிக்கேட்டேன். உடனே அவர் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து என்னிடம் தகராறு செய்ததுடன், கத்தியை காட்டி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஜீவாவை அவரது கணவர் சிவக்குமார் கத்தியை காட்டி மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com