சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

பொள்ளாச்சி அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த மாமரத்துபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). கல் உடைக்கும் தொழிலாளி. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து மாமரத்துபட்டியில் வந்து தங்கினார். மாமரத்துப்பட்டில் ராஜேந்திரன் வசித்துவரும் வீட்டில் அவரது தாயார் நாச்சியம்மாளும் வசித்து வந்துள்ளார். அவர் பெயரில் வீடு உள்ளிட்ட சில சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. ராஜேந்திரனின் சகோதரர் சரவணன்(32), கட்டிட தொழிலாளியான இவர் பொள்ளாச்சி குமரன் நகரில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு சரவணன் மாமரத்துப்பட்டிக்கு சென்று தனது தாய் நாச்சியம்மாளிடம் சொத்து கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட ராஜேந்திரனை சரவணன் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். கோமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து வீரல்பட்டியில் தலைமறைவாக இருந்த சரவணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com