பழனி கோவிலில் சட்டமன்ற துணை சபாநாயகர் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்ய வந்த துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
சாமி தரிசனம் செய்ய வந்த துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
Published on

பழனி:

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனியில் பல்வேறு அரசியல்வாதிகள், தலைவர்கள், அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்றார். மூலவர் தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து ஸ்ரீபோகர் சன்னதி, கைலாசநாதர் சன்னதிக்கு சென்றார்.

கோவில் அன்னதான கூடத்தில் பக்தர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்பு வின்ச் மூலம் அடிவாரம் சென்றடைந்தார். முன்னதாக பழனி கோவில் இணைஆணையர் ராஜமாணிக்கம் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதங்களை பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com