மனைவியுடன் பழகியதை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

திருபுவனை அருகே மனைவியுடன் பழகியதை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன ஊழியரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே நல்லூர் காலனி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியுடன் அதேபகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த முருகன் இதுபற்றி விஜயனிடம் கேட்டு கண்டித்தார்.

இதில் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜயன் தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து முருகனை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த முருகன் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com