அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு- 19 லட்சம் பேரின் பெயர் இல்லை

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் சேர்க்க காத்திருந்த மக்கள் (கோப்பு படம்)
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் சேர்க்க காத்திருந்த மக்கள் (கோப்பு படம்)
Published on

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானோர் மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இறுதி வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அசாமில் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில் தற்போது அது பாதியாக குந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com