அசாமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்ததாகவும் இது பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும் அசாம் மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com