மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி
Published on

வையம்பட்டி:

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி நவலூரணிப்பட்டியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு தொட்டிபட்டி பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை மறியல் தொடரும் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com