ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: மாலத்தீவை 5-0 என வீழ்த்தியது இந்திய ஆண்கள் அணி

மலேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 5-0 என மாலத்தீவை வீழ்த்தியது. #AsianBadmintonChampionships #Indiamen
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: மாலத்தீவை 5-0 என வீழ்த்தியது இந்திய ஆண்கள் அணி
Published on

அலோர்செடார்:

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. 

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், மாலத்தீவின் சாயன் ஷாஹித்தும் மோதினர். இதில் 21-5, 21-6 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். இன்று கிடாம்பி ஸ்ரீகாந்த்தின் 25-வது பிறந்தநாள் ஆகும்.

அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத்தும், மாலத்தீவின் அகமது நிபலும் விளையாடினர். இப்போட்டியில், 21-10, 21-4 நேர் செட்களில் சாய் பிரனீத் வென்றார்.

மூன்றாவது ஒற்றையர் பிரிவு போட்டியில் சமீர் வர்மாவும், மாலத்தீவின் அர்சலான் அலியும் மோதினர். இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-5, 21-1 என்ற நேர் செட்களில் மாலத்தீவு வீரரை தோற்கடித்தார்.

இரட்டையர் ஆட்டத்தில் சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராஜ் ரெட்டியுடன் இணைந்து 21-8, 21-8 என்ற நேர் செட்களில் மாலத்திவீன்சாயன் ஷாஹித், ஷகிம் ஜோடியை வீழ்த்தியது. 

மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன், ஷ்லோக் ராம்சந்திரன் ஜோடி, மாலத்தீவின் அகமது நிபல், அர்சலான் அலி ஜோடியை 21-2, 21-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆண்கள் அணி இந்தோனேசியாவையும், பெண்கள் அணி ஜப்பானையும் எதிர்கொள்ள இருகின்றன. #AsianBadmintonChampionships #Indiamen

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com