

அலோர்செடார்:
ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு போட்டியில் இந்தியா மகளிர் அணியும், ஜப்பான் மகளிர் அணியும் மோதியது.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 24-22 என்ற நேர்செட்டில் பிட்ரியானியை (இந்தோனேசியா) தோற்கடித்தார்.
முதல் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்வினி போபண்ணா, சிக்கி ரெட்டி ஜோடி, 21-5, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கிரேசியா போலி, அப்ரியானி ரஹாயூ ஜோடியிடம் வீழ்ந்தது.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கிருஷ்ணபிரியா, இந்தோனேசியாவின் ஹன்னா ரமாதினியிடன் 21-8, 21-15 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.
இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சன்யோகிதா கோர்பாடே, பி.வி. சிந்து ஜோடியும், இந்தோனேசியாவின் அவாண்டா, இஸ்திரானி நீ ஜோடியும் மோதியது. இதில் 21-9, 21-18 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா ஜோடி வெற்றி பெற்றது.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேசியா அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெற உள்ள ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்ள உள்ளது. #AsianBadmintonChampionships #IndiaWomen