

இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘எங்களுடைய முன்னேற்பாடுகள் (preparation) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா உடன் மோதுவதற்கு கிடைக்கும் ஓய்வு நாட்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்வோம்.
இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முதல் பெரிய ஆட்டம். அதனால் உத்வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம். இந்தியாவிற்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்துவோம்.
பெரிய தொடரின்போது உத்வேகம் முக்கியமானது. உத்வேகம்தான் முக்கியமான ரோலாக இருக்கும். அணி அதிகமான நம்பிக்கையில் உள்ளது. மனஉறுதியும் சிறப்பாக உள்ளது. ஆக, முதல் போட்டியில் இருந்தே உத்வேகத்தை அதிகரித்து, அதை கடைசி வரை கொண்டு செல்வோம்.