

புதுடெல்லி:
நாட்டில் உள்ள பல ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கிறது. ஐகோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் என்ற குழு தேர்வு செய்கிறது.
கடந்த வாரம் மும்பை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருந்த இடங்களை நிரப்ப 17 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற ஐகோர்ட்டுகளுக்கு 44 நீதிபதிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அலகாபாத் ஐகோர்ட்டுக்கு 29 பேரும், தமிழ்நாட்டுக்கு 6 பேரும், கல்கத்தா கோர்ட்டுக்கு 7 பேரும், கர்நாடகா கோர்ட்டுக்கு 2 பேரும் தேர்வாகிறார்கள். இது சம்மந்தமாக ஏற்கனவே கடந்த 10-ந்தேதி கொலேஜியம் கூடி ஆய்வு செய்துள்ளது.
ஏற்கனவே கொலேஜியம் தேர்வு செய்த நீதிபதிகள் ஏற்றுக்கொள்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. ஆனாலும் கடந்த வாரம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல மற்ற நீதிபதிகளும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.