அருப்புக்கோட்டை அருகே பெண் தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

விருதுநகர்:

விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நூலகத்தில் தொகுப்பூதிய ஊழியராக வேலை பார்த்து வந்தவர் காமாட்சி (வயது 43). இவர் தனது கணவர் அசோகன் (52) உடன் பாண்டியன்நகரில் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் சங்கரேஸ்வரி (21) தனது கணவருடன் இந்திராநகரில் வசித்து வருகிறார். அசோகன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை காமாட்சி தனது வீட்டில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை கணவர் அசோகன் காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பாண்டியன்நகர் போலீசார் இருவரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நூலகத்தில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மாயமானதை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் மனவேதனை அடைந்த காமாட்சி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com