அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஓம் முருகா நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் முஸ்தபா (வயது 25). இவர் அரிசி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்ஜான். தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்தபா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முஸ்தபா, அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com