அருப்புக்கோட்டையில் டிரைவர் வெட்டிக்கொலை

அருப்புக்கோட்டையில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை வெள்ளைகோட்டை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் விக்னேஷ்(வயது 26). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது பெரியப்பா நடராஜனின் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் பந்தல்குடி ரோடு செல்லும் வழியில் பெரிய கண்மாய் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அங்கு ஆண் பிணம் கிடப்பதாகவும் அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் வெட்டுப்பட்டு ஒருவர் இறந்து கிடந்தார்.

விசாரணையில் அவர் விக்னேஷ் என்பதும், கொலை செய்யப்பட்டு கண்மாயில் அவரது பிணம் வீசப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. கொலைக்கான காரணம் குறித்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட விக்னேஷ்க்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com