மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி பெண் பலி

அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

அருப்புக்கோட்டை:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெரிய மணக்குளத்தைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவருடைய மனைவி பாத்திமா (வயது 55). இவர் நேற்று தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். துக்க வீட்டுக்கு சென்றபின், மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாத்திமா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com