பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்- ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கவர்னர்

அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கவர்னர் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ArunachalPradesh #Governor #BrigMishra
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்- ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கவர்னர்
Published on

தவாங் நகர்:

அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி. மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். தவாங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து இருந்தார். அப்போது நிகழ்ச்சியில் ஒரு கர்ப்பிணி பெண் கலந்து கொண்டார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும் அவரை அவசரமாக இடாநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

இதனையடுத்து கவர்னர் மிஸ்ரா அந்த பெண்ணையும், அவரது கணவரையும் தனது ஹெலிகாப்டரில் அழைத்து கொண்டு இடாநகர் நோக்கி சென்றார். தன்னுடன் வந்த 2 அதிகாரிகளை தவாங்க் நகரில் தங்க உத்தரவிட்டார். அவர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர்,  தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது. எரிப்பொருள் நிரப்பிய பின்னர் ஹெலிகாப்டரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவலி அதிகமானது. இதனையடுத்து தேஜ்பூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கவர்னர் உடனடியாக விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்தார். நிறைமாத கர்பிணியான அந்த பெண்ணையும், கணவரையும் இடா நகருக்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.

ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன்பாகவே ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த பெண்ணிற்க்கு மருத்துவமனையில் அழகான குழந்தை பிறந்தது.

அந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை பற்றி கேட்டறிந்த கவர்னர் குழந்தை பெற்ற பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய கவர்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. #ArunachalPradesh #Governor #BrigMishra

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com