பாராளுமன்ற மேல்சபை ஆளும்கட்சி தலைவராக அருண் ஜெட்லி மீண்டும் நியமனம்

பாராளுமன்ற ராஜ்யசபையின் ஆளும்கட்சி தலைவராக நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற மேல்சபை ஆளும்கட்சி தலைவராக அருண் ஜெட்லி மீண்டும் நியமனம்
Published on

பதவிக்காலம் முடிவடைந்த பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வடமாநில சட்டசபைகளில் சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் நிதி மந்திரி அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, ஆளும் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற ராஜ்யசபையின் தலைவராக பதவி வகித்துவந்த அருண் ஜெட்லியின் பதவிக்காலம் ஆளும்கட்சி தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவரை மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, இந்த தகவலை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த்குமார் பாராளுமன்ற மேல்சபை சபாநாயகரான வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற மேல்சபை கூடியபோது ராஜ்யசபையின் ஆளும்கட்சி தலைவராக நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com