அரும்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

அரும்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரும்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
Published on

போரூர்:

அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகே இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த ஒரு பையில் சுமார் 2கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து காரில் இருந்த அக்‌ஷய் கீர்த்தி, கவுசிக், நதிம், பிரேம் ஆகிய 4பேரை கைது செய்தனர்.

பிடிபட்ட 4 பேரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது. அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? எங்கு சப்ளை செய்ய எடுத்து சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com