மத்தூரில் தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மத்தூரில் கேலி கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் ரம்ஜான். இவரது மனைவி கத்தாஜி. இவர்களது மகள் சம்ருத் (வயது23). இவரது வீட்டின் அருகே மலையாண்டஅள்ளியை சேர்ந்த சிவானந்தம் மகன் பசுபதி (20) என்பவர் நின்று கொண்டு சம்ருத்தை கேலி, கிண்டல் செய்துள்ளார். 

இதனை பார்த்த அவரது தாய் கத்தாஜி வந்து பசுபதியை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் தாய், மகள் இவருக்கும் பசுபதி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து கத்தாஜி மத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி பெண்ணை கேலி, கிண்டல் செய்து தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் பேரில் பசுபதி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளைசிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com