தஞ்சை அருகே இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது

தஞ்சை அருகே பணத் தகராறில் இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வல்லம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மகேந்திரகுளம் பகுதியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன் சூரஜ் (வயது25). இவர் தஞ்சையில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் வேலை பார்த்து வரும் நிறுவனம் மூலம் தஞ்சையில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அந்த குழுவை சேர்ந்த தஞ்சையை சேர்ந்த ஒரு இளம்பெண் சுமதி வயது (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாலிபர் சூரஜிடம் கடன் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று சூரஜுக்கு போன் செய்த சுமதி மீண்டும் கடன் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதனையடுத்து சுமதியை வாலிபர் சூரஜ் தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வர சொன்னதாக தெரிகிறது. இதனால் சுமதி தனது மொபட்டில் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கு வந்த சுமதியை வாலிபர் சூரஜ் நைசாக பேசி வல்லத்தில் பணம் தருவதாக கூறி சுமதியின் மொபட்டிலேயே சூரஜூம் தஞ்சை வல்லம் சாலையில் சென்றுள்ளார்.

வல்லம் செல்லும் வழியில் சுமதியின் மொபட்டை தான் ஓட்டுவதாக கூறி சுமதியை பின்னால் அமர வைத்து சூரஜ் வண்டியை ஓட்டி சென்றார்.

தஞ்சை திருச்சி புறவழிச்சாலை அருகே இருவரும் மொபட்டில் வந்த போது வாலிபர் சூரஜ் மொபட்டை சுமதியிடம் சொன்னது போல வல்லத்திற்கு விடாமல் இடையில் உள்ள ஒரு ஆர்.எஸ்.பதி மர நடப்பட்டுள்ள தோப்பிற்குள் சுமதியை மொபட்டில் அழைத்து சென்றார். அங்கே சுமதியை ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் எடுக்க முயற்சித்துள்ளார். அதற்கு சுமதி உடன்படாததால் வாலிபர் சூரஜ் சுமதியை அருகில் கிடந்த கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

உடனே சுமதி சூரஜிடம் இருந்து தப்பிப்பதற்காக தஞ்சை -திருச்சி சாலைக்கு ஓடி வந்தார். பின்னால் விரட்டி வந்த சூரஜ் தஞ்சை திருச்சி சாலையில் வைத்து சுமதியை மிரட்டி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சுமதியிடம் விசாரித்து இதுகுறித்த தகவலை வல்லம் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூரஜ், சுமதி ஆகிய இருவரையும் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின்பேரில் சூரஜை வல்லம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com