ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சியில் நடந்து சென்ற ஆசிரியையிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி வயலூர் ரோடு ராமலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஹேமா (வயது32). அரசு பள்ளி  ஆசிரியை. சம்பவத்தன்று ராமலிங்க நகர் மகாகணபதி தெருப்பகுதியில் ஹேமா நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஹேமா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். ஹேமா சத்தம் போடவே, அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் நகை தப்பியது.

இது குறித்து ஹேமா உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் ஹேமாவிடம் நகை பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com