பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

பண்ருட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை சோதனை நடத்தியதில் அவரிடம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். இதையொட்டி வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அம்பேத்கார் நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பதும், அந்த பகுதியில் அவர் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. இதையொட்டி சக்திவேலை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யதனர்.#tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com