ராயக்கோட்டை அருகே கூலி தொழிலாளிக்கு அடி-உதை: 3 பேர் கைது

ராயக்கோட்டை அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 30). இவர் அதேஊரை சேர்ந்த தனது உறவினரான கிருஷ்ணன் (45) என்பவரிடம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் அந்த பணத்தை கிருஷ்ணன் திருப்பி கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை. விரைவில் கொடுக்கிறேன் என சிவராஜ் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான அருணாச்சலம்(55), லட்சுமணன்(42) ஆகியோர் சிவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து சிவராஜ் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ சிற்றரசு வழக்குபதிவு செய்து, சிவராஜை தாக்கிய கிருஷ்ணன், அருணாச்சலம், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com