2-வது மனைவியின் மகள்களை பாலியல் தொல்லை செய்த ஓட்டல் உரிமையாளர் கைது

2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
2-வது மனைவியின் மகள்களை பாலியல் தொல்லை செய்த ஓட்டல் உரிமையாளர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 37). இவர் எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் திருமண மண்டபம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே இவரது ஓட்டலுக்கு எதிரே காபி கடை நடத்தி வரும் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ராஜி தனக்கு திருமணம் நடக்கவில்லை என கூறி அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 15 வயதில் மகள் இருந்தார். மேலும் 16 வயது பெண்ணை வளர்ப்பு மகளாகவும் வளர்த்து வந்தார். அவர்கள் இருவரும் தாயாருடன் வசித்தனர்.

இதற்கிடையே அந்த 2 சிறுமிகளுக்கும் ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுபற்றி அவர்கள் புதுவை குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை நடந்தது உண்மை என்று தெரியவந்தது.

இதனால் புதுவை குழந்தைகள் நல கமிட்டியினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டார்.

இதனையடுத்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராஜை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com