திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு அலுவலர் கைது

திருவாரூர் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு அலுவலர் கைது
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே அயோத்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 42). இவர் திருவாரூர் பொதுப்பணித்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே பானுமதி என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் பொதுப்பணித் துறையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரியும் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த கலைவாணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இதனால் அவர் தன்னை திருமண செய்து கொள்ளுமாறு யோகேஸ்வரனை கேட்டபோது அவர் மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த கலைவாணி இதுகுறித்து கடந்த 2015-ம் ஆண்டு திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் நேற்று இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பழகியதாக யோகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com