சேதராப்பட்டில் மறியலில் ஈடுபட்ட 385 பேர் கைது

பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டில் மறியலில் ஈடுபட்ட 385 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சேதராப்பட்டு:

பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற் சாலைகளும் மூடப்பட்டது. 

கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொருளாளர் பிரபுராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து பேரணி மற்றும் சாலை மறியல் நடந்தது. 25 பெண்கள் உட்பட 165 பேர் கைது செய்யப்பட்டனர்.  

இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் பச்சமுத்து, ஹென்றி தாஸ், சரவணன், ரமேஷ், குமார் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் ஏ.ஐ.சி.டி.யு. மாநில நிர்வாகி மோதிலால் தலைமையில் புதுப்பேட்டை முழுவதும் அடைக்க சொல்லி இரு சக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com