தனியார் கம்பெனி மேலாளரிடம் மொபைல் திருடிய 3 பேர் கைது

பர்கூர் அருகே தனியார் கம்பெனி மேலாளரிடம் ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் கம்பெனி மேலாளரிடம் மொபைல் திருடிய 3 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பையனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் பிரபு(35)., இவர் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்கு பிரிவு மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த வேலையாக நேற்று ஊருக்கு வந்துள்ளார். 

அப்போது சென்னை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் அங்கிநாயனப் பள்ளி அருகே வரும்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 பேர் பிரபுவிடமிருந்த ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள மொபைல்போனை பறித்து கொண்டு அந்த பகுதியில் உள்ள தோப்பில் தலைமறைவாகி விட்டனர். பின்னர் உடனடியாக பிரபு பர்கூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் சப்-இன்பெக்டர் ரவிசந்திரன் அந்த பகுதியில் மறைந்திருந்த  3 பேரையும் பிடித்து விசாரித்ததில் சூளகிரி பகுதியை சேர்நத ஸ்ரீதர்(22), ஜெகதேவியை சேர்ந்த பிரதீப்(22), லோகநாதன்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மொபைல் போனை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com