சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பெண்கள் கைது

சென்னையில் பர்தா அணிந்து சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதில் குற்றவாளிகள் சிக்கினாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நீடித்துவருகிறது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் பெண்களே ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராயப்பேட்டை மீசார்பேட் மார்க்கெட் பகுதியில் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரிதா அணிந்து நின்ற 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ரியானா(18), பர்கீன் ஜெக்ரா (19) என்பது தெரிந்தது. இருவரும் தனியாக அறை எடுத்து தங்கி இரவு நேரங்களில் பர்தாவுடன் சென்று நோட்டமிட்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். 

இதேபோல் அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

மோட்டார் சைக்கிள் திருட்டை 2 பெண்கள் மட்டும் செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களுக்கு பின்னால் கும்பல் இருக்கலாம் என்று தெரிகிறது. 

இதுபற்றி பிடிபட்ட 2 பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com